Actor Vijay Antony Latest Interview | “ஒரு படத்தின் வெற்றியோ, தோல்வியோ என்னைப் பாதிக்காது; ஏனெனில் இரண்டையும் நான் சுமப்பதில்லை” என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
Actor Vijay Antony Latest Interview | “ஒரு படத்தின் வெற்றியோ, தோல்வியோ என்னைப் பாதிக்காது; ஏனெனில் இரண்டையும் நான் சுமப்பதில்லை” என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
Published on: September 8, 2024 at 9:30 am
Actor Vijay Antony Latest Interview | நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் படம் செப்.27ஆம் தேதி திரைக்க வருகிறது. இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சரண் ராஜ் நடித்துள்ளார்.
மேலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனமும் நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி, “வெற்றியோ தோல்வியோ எதையும் நான் மனதில் ஏற்றிக் கொள்வதில்லை. எதுவும் என்னை பாதிக்காது என்றே நினைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க : பார்த்திபனை கவர்ந்த, கோழிப்பண்ணை செல்லதுரை’: என்ன சொன்னார் தெரியுமா?
தொடர்ந்து, உங்கள் படங்கள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வருவதுபோல் இருக்கிறதே என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு படத்துக்கும் 100 சதவீத பங்களிப்பை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். சில படங்கள் கடந்த காலங்களில் நான் ஒப்பந்தம் செய்தது. இதனால்தான் என் படங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரீலிஸ் ஆவதுபோல் உள்ளது” என்றார்.
2024ல் மட்டும் விஜய் ஆண்டனியின் இரண்டு படங்கள் தியேட்டரில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com