கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தை ரா பார்த்திபன் பாராட்டியுள்ளார்.
கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தை ரா பார்த்திபன் பாராட்டியுள்ளார்.
Published on: September 7, 2024 at 11:57 pm
Director R Parthiban | சீனு ராமசாமியின் டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் கோழிப்பண்ணை செல்லதுரை’. இந்தப் படத்தை இயக்குனர் ரா. பார்த்திபன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ரா. பார்த்திபன், “சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரையில்’கோழிப்பண்ணை செல்லதுரை’ வெகு இயல்பான எளிமையான எள்ளளவும் சினிமாத்தனம் இல்லாமல்,பாசத்தின் வலிமையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் கிராமியப் படம்.நாயகன் செல்லதுரையாக வாழ்ந்திருக்கிறார் Climax-ல் நம்மையறியாமல் கண்கள் விசும்ப” எனத் தெரிவித்துள்ளார்.
சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரையில்’கோழிப்பண்ணை செல்லதுரை’ வெகு இயல்பான எளிமையான எள்ளளவும் சினிமாத்தனம் இல்லாமல்,பாசத்தின் வலிமையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் கிராமியப் படம்.நாயகன் செல்லதுரையாக வாழ்ந்திருக்கிறார் Climax-ல் நம்மையறியாமல் கண்கள் விசும்ப pic.twitter.com/et3moVo5Ss
— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 6, 2024
இயக்குனர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டம் பெரியக்குளத்தில் நடந்தது.
இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் நடித்துள்ளனர். வைரமுத்து, கங்கை அமரன், பா. விஜய், ஏகாதசி உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். அண்ணன்- தங்கை உறவை பேசும் இந்தப் படம் ஆக்லாண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : ‘ஆபாச படத்தில் நடித்தேன்’: மனம் திறந்த நடிகை ஸ்வர்ணமால்யா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com