அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. 3 மாவட்டங்களில் 11 இடங்களில் ரெய்டு!

TNCSC Rice Scam: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் அரவைப் பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Published on: November 25, 2026 at 2:57 pm

சென்னை, நவ.25, 2026: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரிசியாக மாற்றுவதற்காகத் தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இடத்திலும் என மொத்தம் 11 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. நவீன அரிசி ஆலைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களுக்குத் தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில், ஆயிரக்கணக்கான டன் அரிசி இருப்பில் குறைபாடு இருந்ததும், உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமல் முறைகேடுகள் நடைபெற்றதும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 11 இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் முறைகேட்டின் முழு விவரங்கள் தெரியவரும்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி புகார்!

தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து!
CM Vijay

தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு; 78 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.. முதல்வர் விஜய் முன்னிலையில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com