நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக கார் டிரைவர் பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணை தொடர்கிறது.
February 6, 2025
நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக கார் டிரைவர் பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணை தொடர்கிறது.
Published on: August 28, 2024 at 12:27 am
Actress Rekha nair car accident | ரேகா நாயர் கார் மோதல்: சென்னையில் நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை ஜாஃபர்கான் பேட்டையில் நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார் ஓட்டுநரை கைது செய்தனர்.
ஜாஃபர்கான்பேட்டையில் ள்ள பச்சையப்பன் தெற்கு பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் தெரு பகுதியில் படுத்து கிடந்த மஞ்சள் என்பவர் மீது மீது கார் ஏறி இறங்கியுள்ளது.
விபத்தை தொடர்ந்து, மஞ்சள் என்பவரை மருத்துவமனை கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். நடிகை கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz ட்விட்டர் https://x.com/DravidanTimes இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com