மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை.. உதயநிதிக்கு சவால் விடுத்த ஆதவ் அர்ஜூனா!

Aadhav Arjuna: மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்

Published on: September 28, 2026 at 6:10 pm

மதுராந்தகம் செப்.28, 2026: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், கட்சி வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார். மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், திமுகவின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையையோ அல்லது விரும்பினால் தனது தாத்தாவையோ அழைத்து வந்து பிரசாரம் செய்யலாம் என்றும், ஆனால் திமுக தோல்வியடைந்தால் உதயநிதி ஸ்டாலின் தனது கட்சிப் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்யத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க : ஓம் காளி ஜெய் காளி“கட்சிப் பெயரை சொல்லி சொல்லுங்க”

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com