Karur stampede: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Karur stampede: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: September 28, 2025 at 11:16 am
கரூர், செப்.28, 2025: கரூர் வேலுச்சாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தலைவர் விஜய்யின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 60க்கும் மேற்பட்டோர் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரூர் முழுவதும் சோகம் சூழ்ந்து காணப்படுகிறது.
தற்போது, 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களில் 14 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு பெண் அடையாளம் காணப்படவில்லை. அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ். சரவணன் கரூரில் தெரிவித்தார்.
முன்னதாக, பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க திருச்சியில் இருந்து 24 மருத்துவர்கள் கரூர் விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க : தி.மு.க ஆதரவாளர்களை, ‘அரசியல் விஞ்ஞானிகள்’ என கலாய்த்த விஜய்.. நாமக்கல்லில் பரபரப்பு உரை!
மேலும், சேலத்தில் இருந்து 20 மருத்துவர்களும், திண்டுக்கல்லில் இருந்து ஐந்து மருத்துவர்களும் கரூர் விரைந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்குள் கரூர் சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார். இந்நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். இதற்கிடையில், கரூர் நகர காவல்துறை, தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட பலருக்கு எதிராக பிஎன்எஸ் பிரிவுகள் 109,110,125பி, 223 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 109 மற்றும் 110 ஆகியவை முறையே கொலை முயற்சி மற்றும் குற்றமற்ற கொலை முயற்சி ஆகியவற்றைக் கையாள்கின்றன. பிரிவு 125 என்பது அவசரமாக அல்லது அலட்சியமாக நடந்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களைக் குறிக்கிறது. அதே நேரத்தில் பிரிவு 223 என்பது ஒரு பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுவது தொடர்பானது ஆகும்.
முன்னதாக, நாகப்பட்டினத்தில் நடந்த விஜய் பேரணியில் கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. அப்போதும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காபி, தயிர் வடை சாப்பிட்டோம்.. கரூர் எம்.பி எங்கே? சிரித்துக்கொண்டே வந்த ஜோதிமணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com