Whale Rescue: முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பகுதியில் சுமார் 30 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட பிரைடி இன திமிங்கலம் கரை ஒதுங்கியது.
Whale Rescue: முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பகுதியில் சுமார் 30 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட பிரைடி இன திமிங்கலம் கரை ஒதுங்கியது.

Published on: August 10, 2026 at 1:02 pm
திருவாரூர், ஆக. 10, 2026: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலகப் புகழ்பெற்ற அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள லகூன் எனப்படும் ஆழமற்ற கடல் பகுதியில், சுமார் 30 அடி நீளமும் 3 டன் எடையும் கொண்ட பிரைடி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று திடீரென கரை ஒதுங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆழமற்ற பகுதியில் சிக்கியிருந்த பிரம்மாண்ட திமிங்கலத்தை கடலுக்குள் கொண்டு செல்லும் பணியில் நீண்ட நேரம் போராடினர். பின்னர் திமிங்கலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் ஆழ்கடலுக்குள் திருப்பி அனுப்பப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, கரை ஒதுங்கிய பிரைடி இன திமிங்கலத்தின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. மேலும், அதன் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் உரிய நேரத்தில் தகவல் அளித்ததுடன், மீட்புப் பணியிலும் பங்கேற்றதால் திமிங்கலத்தை உயிருடன் மீண்டும் கடலுக்குள் அனுப்ப முடிந்தது.
முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதி பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில், சுமார் 3 டன் எடை கொண்ட பிரைடி இன திமிங்கலம் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீனவர்களின் இந்த உடனடி நடவடிக்கை மற்றும் துரிதமான கூட்டுப் பணியால் அரிய வகை திமிங்கலத்தின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அப்பகுதி மக்களும் இயற்கை ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:நெல், கரும்பு கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com