உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 11-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.
உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 11-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.
Published on: December 9, 2024 at 11:20 am
Updated on: December 9, 2024 at 2:00 pm
World Chess Championship 2024 | உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 25 ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையில் நடைபெறுகிறது. இந்த போட்டி 14 சுற்றுகள் கொண்டது. முதலில்7.5 புள்ளிகளை எட்டும் வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள 10 சுற்றுகளில் இருவரும் 5-5 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற 12 ஆவது சுற்று ஆட்டத்தில் அபாரமாக ஆடி குகேஷ் டிங் லிரெனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதனால், 11 சுற்று ஆட்டங்களின் முடிவில் குகேஷ் 6 புள்ளிகளுடனும், லிரென் 5 புள்ளிகளுடனும் உள்ளனர். இன்னும் 3 சுற்றுகள் மட்டுமே உள்ள நிலையில், லிரென் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பிலும், குகேஷ் பட்டத்தை பெரும் முனைப்பிலும் தீவிரமாக உள்ளனர்.
சாம்பியன் பட்டம் பெற லிரெனுக்கு 2.5 புள்ளிகளும், குகேஷுக்கு 1.5 புள்ளிகளும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற உள்ள 12வது சுற்று ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
December 9, 2024: Game 12
December 10, 2024: Rest Day
December 11, 2024: Game 13
December 12, 2024: Game 14
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com