ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Published on: November 19, 2024 at 9:43 pm
Womens Asian Champions Trophy 2024 | நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, சீனா, ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் 8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதையடுத்து தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக ஆடி 48 மற்றும் 56-வது நிமிடங்களில் நவ்னீத் கவுர் மற்றும் லால்ரெம்சியாமி தலா 1 கோல் அடித்து அசத்தினர். இதன் மூலம் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்ள உள்ளது.
இதையும் படிங்க ‘என் வாழ்வில் பல தோல்விகளை சந்தித்தவன் நான்’: சதம் அடித்த சஞ்சு சாம்சன் உருக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com