M S Dhoni | 2025 ஐ.பி.எல்.லில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சி.எஸ்.கே சி.இ.ஓ முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
M S Dhoni | 2025 ஐ.பி.எல்.லில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சி.எஸ்.கே சி.இ.ஓ முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Published on: October 21, 2024 at 5:34 pm
M S Dhoni | ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது எதிர்கால திட்டங்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
43 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடினார்.
அதன்பிறகு அவரைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில் ஐ.பி.எல் அடுத்த தொடர் நடைபெற உள்ளது. ஆகவே 2025ல் மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதனின் கூற்றுப்படி, “தோனி இன்னமும் தனது முடிவை அறிவிக்கவில்லை” எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அணி உரிமையாளர்களுக்கு அக்டோபர் 31-ம் தேதிக்கு முன் அறிவிப்பார்” என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில், “இதுவே வீரர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான கடைசி தேதியாகும். மேலும் அவர், “தோனி சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதை தோனி இன்னும் எங்களுக்கு உறுதிப்படுத்தவில்லை. தோனி, ‘அக்டோபர் 31க்கு முன் சொல்கிறேன்’ என்றார். அவர் விளையாடுவார் என்று நம்புகிறோம்” என்றார்.
இதையும் படிங்க பாகிஸ்தான் மண்ணில் சம்பவம் செய்த ஜோ டூட்: இரட்டை சதம்: புதிய சாதனைகள் படைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com