ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்.. பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பி.வி சிந்து.!

Sindhu Creates History: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், டைட்டில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளார் பி.வி சிந்து .

Published on: July 19, 2026 at 1:37 pm

டோக்கியோ ஜூலை 19 2026; ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் பி.வி. சிந்து. டோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், உள்ளூர் வீராங்கனை அகனே யமகுச்சியை நேர் செட்களில் வீழ்த்தி, 21-17, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார்.

இந்த வெற்றி, சிந்துவின் முதல் ‘சூப்பர் 750’ பட்டமாகும். 31 வயதான சிந்து, துடிப்பான ஆக்ரோஷமான ஆட்டத்தையும், அதே சமயம் கட்டுப்பாடான மற்றும் நிதானமான அணுகுமுறையையும் வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிந்து கடைசியாக 2024-ல் சையத் மோடி சர்வதேசப் போட்டியில் பட்டம் வென்றிருந்தார். 2019-ல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகு, அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். நீண்ட காலமாக பட்டம் வெல்லாமல் இருந்த சிந்துவுக்கு, இந்த வெற்றி புதிய ஊக்கத்தை அளித்துள்ளது.

இந்த சாதனை, இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது. சிந்துவின் வெற்றி, இந்திய விளையாட்டு உலகிற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், “சிந்து மீண்டும் உலக தரத்தில் இந்தியாவின் பெயரை உயர்த்தியுள்ளார்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜப்பான் ஓபன் 2026: ஒகுஹாரா விலகல்… அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com