Ponting to Coach India? : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் வரலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ponting to Coach India? : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் வரலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: June 28, 2026 at 4:10 pm
புதுடெல்லி ஜூன் 28, 2026; இந்திய அணியின் புதிய T20I கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டது கேட்டவுடன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவார் என நினைத்தேன்; அவர்கள் இருவரும் இணைந்தே வருபவர்கள்” என்று கூறியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்
முன்னதாக, சூர்யகுமார் யாதவ் T20 உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக இருந்தபோதிலும், அவரது மோசமான ஆட்டத்தால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் 2026-இல் இந்திய T20I அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஐயர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு T20I அணியில் மீண்டும் விளையாடி, தனது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
ரிக்கி பாண்டிங் – ஐயர் கூட்டணி
IPL-இல் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணிகளில், ஐயர்–பாண்டிங் கூட்டணி வெற்றிகரமாக செயல்பட்டது.
பாண்டிங், ஐயரின் கேப்டன் திறமைகளை மேம்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார். இதனால், ஐயர் இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்டதும், பாண்டிங் இந்திய பயிற்சியாளராக வருவார் என்ற ஊகங்கள் எழுந்தன.
மைக்கேல் வான் கருத்து
இந்த நிலையில் “ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டது கேட்டவுடன், பாண்டிங் பயிற்சியாளராக வருவார் என நினைத்தேன். அவர்கள் இருவரும் இணைந்தே வருபவர்கள். இந்தியா, T20 உலகக் கோப்பையை வென்ற கேப்டனை நீக்கி புதிய கேப்டனை நியமிக்கிறது என்பது மற்ற எந்த நாட்டிலும் நடக்காது” என வான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க; ஒரே ஓவரில் 6 விக்கெட் வீழ்த்திய சிறுவன்.. கிரிக்கெட்டில் மிக அரிதான நிகழ்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com