MS Dhoni : சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளராக மகேந்திர சிங் தோனி வர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல் 2026-இல் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை.
MS Dhoni : சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளராக மகேந்திர சிங் தோனி வர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல் 2026-இல் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை.

Published on: May 23, 2026 at 1:54 pm
சென்னை, மே 23, 2026: ஐ.பி.எல் 2026-இல் மகேந்திர சிங் தோனி ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்தத் தொடரில் ஆரம்பத்திலே அவர் சில காரணங்களால் விலகினார்.
பின்னர், காயம் காரணமாக இறுதி போட்டிக்கும் வெளியேறினார். இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற விவாதம் நடந்து வருகிறது.
இதில், பல முன்னாள் வீரர்கள், “மகேந்திர சிங் தோனி இருக்கும்போது வேறு யாரை தேடுகிறீர்கள்?” எனக் கூறி, தோனியை அடுத்த பயிற்சியாளராக பரிந்துரைத்துள்ளனர்.
இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும், தோனி அணியின் ஆன்மா என்றும், அவர் பயிற்சியாளராக வந்தால் அணி இன்னும் வலுவாகும் என்றும் நம்புகின்றனர்.
மேலும் சிலர், “தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இயல்பான தேர்வு” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு விளையாட்டு வீரராகவும், தலைவராகவும் பெரும் வெற்றிகளைத் தந்தவர் ஆவார்.
இதற்கிடையில், அவர் பயிற்சியாளராக வந்தால், அணி அனுபவம், தந்திரம், மன உறுதி ஆகியவற்றில் மேலும் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : இதுதான் பஞ்சாப் வீழ்ச்சிக்கு காரணம்.. புலம்பும் ரிக்கி பாண்டிங்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com