Dwayne Bravo | டுவைன் பிராவோ அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

February 17, 2025
Dwayne Bravo | டுவைன் பிராவோ அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
Published on: September 27, 2024 at 8:01 pm
Dwayne Bravo | மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025க்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் வழிகாட்டியாக இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராவோ சென்னை சூப்பர் உடன் பிராவோ நீண்டகால உறவைக் கொண்டிருந்தார். அவர், 2011ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். ஐபிஎல் 2025க்கு முன்னதாக டுவைன் பிராவோ கேகேஆர் அணிக்கு ஆலோசகராக இணைந்துள்ளார். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. பிராவோ கடந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
From Champion on the field to legend in our hearts!💛#WhistlePodu for a Bravo of a career! 👏🥳#Yellove @DJBravo47 pic.twitter.com/YUKD7h0wxe
— Chennai Super Kings (@ChennaiIPL) September 27, 2024
தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணிக்காவும் பணி செய்தார். முன்னதாக பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டுக்கு இன்று நான் விடைபெறுகிறேன்” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலக சாதனை படைத்த மெண்டிஸ்: என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com