Bihar obscene dance | பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆபாச நடனம் ஆடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Bihar obscene dance | பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆபாச நடனம் ஆடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Published on: September 27, 2024 at 8:59 pm
Updated on: September 27, 2024 at 11:02 pm
Bihar obscene dance | பீகார் மாநிலத்தில் உள்ள சகர்ஸா மாவட்டம் ஜலைய் காவல் நிலையத்துக்கு உள்பட்ட அரசு பள்ளிக் கூடத்தில் நடந்த திருமண விழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திய நிலையில் சிலர் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின. இந்த நிலையில், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், “பள்ளி வளாகங்களில் இதுபோன்ற விழாக்களை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது” என்றனர். இதற்கிடையில் கல்வி அதிகாரிகளும் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் இது குறித்து பேசிய காவல் அதிகாரி மமதா குமாரி, “இந்த விவகாரம் எங்களுக்கு தெரியவந்துள்ளது. எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : குப்பை கொட்ட சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு: இளைஞருக்கு மரண தண்டனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com