Sukanya Samriddhi Yojana | சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்யும்பட்சத்தில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது தெரியுமா?

February 17, 2025
Sukanya Samriddhi Yojana | சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்யும்பட்சத்தில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது தெரியுமா?
Published on: September 27, 2024 at 7:06 pm
Sukanya Samriddhi Yojana | பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரித்தி யோஜனா. இந்தத் திட்டத்தில் 14 வயதுக்கு உள்பட முதல் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.250 கட்டணத்தில் கணக்கு தொடங்கலாம். ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் 21 ஆண்டுகளுக்கு பின்னர் முதிர்ச்சி பெறும். இந்த நிலையில் இத்திட்டத்தில் ரூ.1 லட்சம் ஆண்டுக்கு முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
ரூ.1 லட்சம் முதலீடு
ஒவ்வொரு வருடமும் உங்கள் மகளின் பெயரில் 1,00,000 ரூபாய் டெபாசிட் செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் 15,00,000 ரூபாய் டெபாசிட் செய்வீர்கள். இந்தத் தொகைக்கு வட்டியாக ரூ.31,18,385 கிடைக்கும்.
இதன் மூலம் 21 ஆண்டுகளில் முதிர்வுத் தொகையாக ரூ.46,18,385 கிடைக்கும். இந்த முதலீடை 2024ல் செய்யத் தொடங்கினால் 2045ல் திட்டம் முதிர்ச்சி பெறும்” என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com