Babar Azam | பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட ஆட்டத்தை மேம்படுத்தும் விதமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாபர் அசாம் இதற்கு முன்பு பாகிஸ்தானின் அனைத்து வடிவ கேப்டனாக இருந்தார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதையடுத்து அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி அவருக்குப் பிறகு டி20 ஐ கேப்டனாக ஆனார். ஆனால் மீண்டும் கேப்டன்சி பாபர் வசம் சென்றது.
அவர் மார்ச் 2024 இல் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.இருப்பினும், 2024 டி 20 உலகக் கோப்பையில் குழு நிலையிலிருந்து வெளியேறியதால், பாகிஸ்தான் கேப்டனாக அவரது இரண்டாவது பதவிக்காலம் வெற்றிபெறவில்லை.
அப்போது அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் தோற்றது. இந்த நிலையில் வங்கதேச அணியிடம் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் பாபர் அசாம் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், “பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். நான் இனி எனது ஆட்டங்களில் கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கேப்டன் என்பது ஒரு பலனளிக்கும் அனுபவமாக உள்ளது, ஆனால் இது ஒரு குறிப்பிடத்தக்க பணிச்சுமையை சேர்க்கிறது. நான் எனது செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன், எனது பேட்டிங்கை ரசிக்க விரும்புகிறேன், மேலும் எனது குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட விரும்புகிறேன், இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 5 பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் இங்குள்ளனர். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா?…
Gautam Gambhir Blames Sarfaraz Khan | மும்பை பேட்ஸ்மேன் சில தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக கௌதம் கம்பீர் பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும்,…
பி.சி.சி.ஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்….
சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால நண்பரும்; இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் தற்போதைய நிலை பலரையும் அதிர்ச்சிக் கொள்ளாக்கி உள்ளது….
2025 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ஆர்.சி.பி கேப்டன் பொறுப்புக்கு 3 வீரர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது….
.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்