Dr Ramadoss | தமிழக கல்வி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அங்கமாக திகழும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 15,000 பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 17,500 பேர் என மொத்தம் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை.
இந்தத் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றும் இ.ஆ.ப. அதிகாரி ஆர்த்திக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதமும், காட்டப்படும் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை. மேலும், ‘ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வராததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாததன் மூலம் பள்ளிக்கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளே முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.
நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டும் முடிவடைந்து விட்ட நிலையில், மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக காத்திருக்காமல் சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Dr Ramadoss : “மூன்று மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க கூடாது” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்….
Dr Ramadoss: “தமிழ்நாட்டின் நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) நியமனத்தை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உடனடி நியமனம் செய்ய வேண்டும்” என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்….
Dr Ramadoss: 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….
Dr Ramadoss: கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதா என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்….
DR Ramadoss: “சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வரும் எனது வேண்டுகோளை ஏற்று, நான் கைகாட்டிய வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து வெற்றிக்கு வித்திட்ட வாக்காளர் பெருமக்களுக்கு…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்