Mythology | மகாபாரத போரில் மடிந்த கர்ணன் நேராக சொர்கத்துக்கு செல்கிறார். அங்கே அவனுக்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் அளவுக்கு அதிகமான பசி மட்டும் வாட்டி வதைக்கிறது. சொர்க்கத்தில் பசி எடுக்காது என்று சொல்வார்கள் ஆனால் நமக்கு மட்டும் பசி வாட்டி வதைக்கிறதே என்று சிந்தித்து கொண்டு இருக்கும் பொழுது அங்கு நாரத மகரிஷி தோன்றுகிறார்.
அவரிடம் நாரதரே சொர்க்கத்தில் பசி போன்ற உணர்வு ஏற்படாது என்று கேள்வி பட்டுள்ளேன்; ஆனால் எனக்கு மட்டும் ஏன் பசி ஏற்படுகிறது என்று கேட்டார். அதற்கு நாரதர் உனது பசி போக ஒரு வழி இருக்கிறது அதற்கு உன் வலது கை ஆள்காட்டி விரலை உன் வாயில் வைத்துக் கொள் உனக்கு பசிக்காது என்று கூறினார்.
அதன்படி கர்ணன் தனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொண்டான். பசியும் நீங்கிவிட்டது. ஆனால் விரலை எடுத்தால் மீண்டும் பசி வந்து வாட்டுகிறது. உடனே கர்ணன், நாரதரே நீங்கள் சொன்னது போல் என் ஆள்காட்டி விரலை வாயில் வைத்த உடன் பசி அடங்குகிறது.
ஆனால் விரலை எடுத்தவுடன் மீண்டும் பசிக்கிறது ஏன் என்று கேட்க கர்ணா உன் வாழ்க்கையில் அத்தனை தானங்களும் செய்த நீ அன்னதானம் மட்டும் செய்ததில்லை அதனால்தான் உனக்கு இங்கு பசி ஏற்படுகிறது. ஆனால் ஒரே ஒருமுறை அன்னசத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்ட ஒருவருக்கு நீ உன் ஆள்காட்டி விரலால் வழி காட்டினாய் அதனால் உன் ஆள்காட்டி விரல் மட்டுமே அன்னதானம் பலன் பெற்றது என்றார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.