Greatness of the Margazhi month | மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா?
Greatness of the Margazhi month | மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா?
Published on: January 6, 2025 at 10:45 am
மார்கழி மாதத்தின் மகத்துவம் | மார்கழி மாதத்தில் மார்க்கண்டேயன் சிவபெருமானை வணங்கி மரணத்திலிருந்து தப்பி நித்திய வாழ்வை பெற்றான். அனுமன் பிறந்தது மார்கழி மாதத்தில் தான். சொர்க்கவாசல் திறக்கும் வைகுண்ட ஏகாதசி வரும் மாதமும் மார்கழியே. பொதுவாக பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் பல காலங்களாக இருந்து வருகிறது.
பசு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் உண்டு. பசு சாண உருண்டையில் பூசணி பூவை செருகி கோலத்திற்கு மத்தியில் வைப்பது மார்கழி முழுவதுமே நடைபெறும். இந்த பசு சாண உருண்டையை வரட்டியாக தட்டி சேகரித்து பொங்கல் அன்று ஆற்றில் விடுவர். மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்ட பின்னரே தனது வேலைகளை தொடங்குவர்.
மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் தான் நடந்துள்ளது என்று இதிகாசம் கூறுகிறது. மேலும் திருப்பாற்கடல் கடையப்பட்ட போது வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில் தான். இந்திரனால் பெரும் மழை வெள்ளம் உண்டாக்கப்பட்டு கோகுலத்தில் வாழ்த்த மக்கள் அனைவரும் துன்பம் அடைந்த பொழுது கிருஷ்ணர் கோவர்தன கிரி மலையை குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியது மார்கழி மாதத்தில் தான்.
இந்த மாதத்தில் பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வழிபட்டு திருப்பாவை பாடுகின்றனர். அந்தக் கண்ணனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களுக்கு கனவாக உள்ளது. ஆண்டாளின் திருப்பாவை பாடுவது மார்கழி மாதத்தின் தனிச்சிறப்பாகும்.
இதையும் படிங்க. நெஞ்சை பிளந்த அனுமன்; வியந்து பார்த்த சபை: அன்று நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com