Mythology | சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தேங்காய் உடைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
Mythology | சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தேங்காய் உடைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
Published on: December 7, 2024 at 11:58 am
Sabarimala | கார்த்திகை மாதம் சபரிமலைக்கு மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து ஐயப்ப சுவாமி பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். இவ்வாறு சபரிமலைக்கு செல்லும் போது ஐயப்ப சுவாமி பக்தர்கள் தேங்காய் உடைத்த பின்னரே சபரிமலைக்கு செல்லுவர். இதேபோன்று சபரிமலையில் இருந்து வீடு திரும்பி வந்த பின்னரும் தேங்காய் உடைப்பர்.
இதற்கான காரணம் என்னவென்றால் ஐயப்ப சுவாமி கருப்பண்ண சாமி இடம் மாலை அணிந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களை நான் பார்த்துக் கொள்வேன் அவர்களின் குடும்பத்தை பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு என்று ஐயப்ப சுவாமி கருப்பண்ணசாமி இடம் கட்டளை விடுகிறார். இதை நான் எப்படி தெரிந்து கொள்வது என்று கருப்பண்ண சுவாமி ஐயப்பரிடம் கேட்க, அதற்கு ஐயப்பன் சபரிமலைக்கு பக்தர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர் ஒரு தேங்காய் உடைப்பர்.
அந்த தேங்காய் சத்தத்தை கேட்டவுடன் நீ அவர்களின் வீட்டிற்கு போய் காவல் இருக்க வேண்டும் என்று கூறினார். எவ்வளவு நாள்களாக காவல் இருக்க வேண்டும் என்று கருப்பண்ணசாமி கேட்ட உடன் அதற்கு ஐயப்பன், சபரிமலையில் இருந்து திரும்பி வந்த பின்னர் இன்னொரு தேங்காய் உடைப்பார்கள் அந்த தேங்காய் சத்தத்தை கேட்ட பின்னர் நீ கிளம்பலாம் என்றார் ஐயப்பன்.
சபரிமலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பும் வரைக்கும் ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தை கருப்பண்ணசாமி காவல் இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. எனவே தான் சபரிமலைக்கு செல்லும் முன்னர் கருப்பா என் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள் என்று கூறி தேங்காய் உடைத்து செல்வர். அதேபோன்று வீடு திரும்பிய பின்னர் கருப்பா என் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொண்டதற்கு நன்றி கருப்பா என்று கூறி மீண்டும் ஒரு தேங்காய் உடைத்த பின்னர் வீட்டுக்குள் செல்வர்.
இதையும் படிங்க :அர்ஜூனன் வில்லை கர்ணனால் அசைக்க முடியுமா? மகாபாரதத்தில் நடந்த சுவாரஸ்யம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com