முதல் மரியாதை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா? சிவாஜி கணேசன் நடிப்பில் இந்த படம் சக்கை போடு போட்டது.
முதல் மரியாதை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா? சிவாஜி கணேசன் நடிப்பில் இந்த படம் சக்கை போடு போட்டது.
Published on: December 7, 2024 at 11:35 am
Mudhal Mariyadhai | பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் முதல் மரியாதை. இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் வயதான தோற்றத்தில் நடித்திருப்பார். அவருக்கு மனைவியாக வடிவுக்கரசி நடித்திருப்பார்.
இந்தப் படத்தில் இரண்டாவது ஜோடி ஒருவரும் உண்டு, அவர்தான் ராதா. படத்தில் ராதாவின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானது. பரிசல் ஓட்டும் பெண்ணாக வரும் அவர் கடைசி வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பார்.
மேலும் ஒன்று இரண்டு காட்சிகள் என்றாலும் படத்தில் சத்யராஜுக்கு அழுத்தமான வில்லன் கதாபாத்திரம். மிரட்டல் வில்லன் கதாபாத்திரத்தில் பார்த்த சத்யராஜ், முதல் மரியாதை படத்தில் வேறு விதத்தில் மாஸ் காட்டியிருப்பார்.
படத்தில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட். கிராமப்புறத்தில் ஒவ்வொரு தெரு வீதிகளிலும் முதல் மரியாதை பாடல் இன்றளவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சிவாஜி கணேசன் இல்லை.
பாரதிராஜா தனது நண்பரான எஸ் பி பாலசுப்பிரமணியத்தை முதலில் நடிக்க கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவர் பாடகர் பணிகளில் பிஸியாக இருந்ததால், அவரால் நடிக்க முடியவில்லை. இந்தத் தகவலை மறைந்த பாடகர் எஸ் பி பி ஒரு மேடையில் கூறியுள்ளார். வந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. எஸ்பிபி அந்த மேடையில் தன்னிடம் பாரதிராஜா பல கதைகளை கூறியுள்ளார். அவர் ஒரு ஜீனியஸ் என்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com