Mythology | சஷ்டியை நோக்க சரவண பவன.. முருக பெருமான் மந்திரத்தின் வரலாறு தெரியுமா?
Mythology | சஷ்டியை நோக்க சரவண பவன.. முருக பெருமான் மந்திரத்தின் வரலாறு தெரியுமா?
Published on: November 14, 2024 at 9:42 am
Mythology | உலகம் முழுவதும் முருக பக்தர்கள் ஏராளமானோர் உள்ளனர். தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பவர் முருகர் என்று இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக புராண கதை ஒன்று உள்ளது. பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர். ஒருமுறை அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி தீரவில்லை.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணி திருச்செந்தூர் சென்றுள்ளார். அவர் வந்த நேரம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. எனவே கந்த சஷ்டி விழா முடிந்த பின்னர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து கந்த சஷ்டி விரதம் இருக்க தொடங்கினார். முதல் நாள் திருச்செந்தூர் கடலில் நீராடி விட்டு.
திருச்செந்தூர் முருக பெருமானை தரிசித்து விட்டு கோயில் மண்டபத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய தொடங்கினார். இவருக்கு முருக பெருமான் காட்சி கொடுத்து அருள் செய்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறமையையும் வழங்கினார். அடுத்த நிமிடமே பாலதேவ ராயர் சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளம் ஓட ஆரம்பித்தது. பின்னர் இவர் சஷ்டியை நோக்க சரவண பவன என்ற திருச்செந்தூர் திருத்தளத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அவரை வாட்டி வந்த வயிற்று வலியும் காணாமல் போனது.
இதையும் படிங்க : கடும் தவம்; பன்றி உடன் சண்டை: அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் கிடைத்தது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com