Mythology | தண்ணீரில் மிதப்பது போல் காட்சியளிக்கும் விஷ்ணு சிலை எங்கு இருக்கிறது தெரியுமா?
Mythology | தண்ணீரில் மிதப்பது போல் காட்சியளிக்கும் விஷ்ணு சிலை எங்கு இருக்கிறது தெரியுமா?
Published on: November 22, 2024 at 7:56 am
Mythology | நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தனில்கந்தா கோவில். பாற்கடலில் ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் எப்படி பள்ளி கொண்டு இருப்பாரோ அதேபோன்று இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளத்திற்கு மத்தியில் 11 தலை ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் காட்சி தருகிறார் ஜல நாராயணன்.
சுமார் 14 அடி நீளத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது என்பது ஆச்சரியத்திற்குரியது. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு குப்தா என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் இந்த சிலை நிறுவப்பட்டது. நேபால் மன்னர் மற்றும் அவரின் குடும்பத்தை சார்ந்தவர் இந்த கோவிலுக்கு வந்தால் அவரின் உயிருக்கு ஆபத்து நிகழும் என்ற நம்பிக்கை நிலவுவதால் நேபால் மன்னரோ அல்லது அவரின் குடும்பத்தை சார்ந்தவர்களோ இந்த கோவிலுக்கு வருவதே இல்லை.
விஷ்ணு பகவான் சிலைக்கு பக்கத்திலேயே சிவபெருமானின் கண்ணாடி போன்ற உருவம் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சிவபெருமானின் திருவிழாவில் இந்த கண்ணாடி போன்ற உருவம் தண்ணீரில் தெரிவதாக மக்கள் நம்புகின்றனர். நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற ஏராளமான பக்தர்கள் தினம் தோறும் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதையும் படிங்க :அர்ஜூனன் வில்லை கர்ணனால் அசைக்க முடியுமா? மகாபாரதத்தில் நடந்த சுவாரஸ்யம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com