Kerala | வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸின் பிரியங்கா காந்தியை எதிர்த்து, நவ்யா ஹரிதாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.
Kerala | வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸின் பிரியங்கா காந்தியை எதிர்த்து, நவ்யா ஹரிதாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.
Published on: October 21, 2024 at 5:50 pm
Kerala | வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் மகிளா மோர்ச்சா தலைவர் நவ்யா ஹரிதாஸை பாஜக களமிறக்கியுள்ளது. அவர் காங்கிரஸின் தேசிய தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரி ஆகியோருக்கு எதிராக போட்டியிடுவார்.
வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் ரேபரேலி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதியை காலி செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவ்யா ஹரிதாஸ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், இரண்டு முறை கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் ஆவார்.
இதற்கு முன்பு 2021 தேர்தலில் கோழிக்கோடு தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் ஹரிதாஸ் 20.89% வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். மேலும் நவ்யா ஓர் மென்பொருள் என்ஜினீயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘சிபிஎம் கட்சிக்கு வந்திடுங்க’; சுரேஷ் கோபிக்கு அழைப்பு விடுத்த பினராய் விஜயன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com