Emergency in 1975: காங்கிரஸின் இந்திரா காந்தி காலத்திய எமர்ஜென்சியின் ஆபத்துக்களை இளைஞர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
Emergency in 1975: காங்கிரஸின் இந்திரா காந்தி காலத்திய எமர்ஜென்சியின் ஆபத்துக்களை இளைஞர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
Published on: June 25, 2025 at 9:35 pm
புதுடெல்லி, ஜூன் 25 2025: 1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தியதை கண்டித்து மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஜூன் 25 2025) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
தொடர்ந்து, அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, பின்னர் கற்பனை செய்ய முடியாத கொடூரங்களுக்கு ஆளானவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சரவை மாநாட்டில் தெரிவித்தார். அப்போது, “அவசரநிலையின் ஆபத்துகளை இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
தொடர்ந்து, “வலுவான மற்றும் செழிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வது நமது கடமை” என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களிடம் கூறியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானம்
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அமைச்சரவை தீர்மானத்தை வாசித்தார். அப்போது அவர், “2025 ஆம் ஆண்டு சம்விதான் ஹத்ய திவாஸின் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்திய வரலாற்றில் இந்த நாளில் அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டது.
நாட்டின் குடியரசு மற்றும் ஜனநாயக உணர்வு தாக்கப்பட்டது, கூட்டாட்சித் தத்துவம் குறைமதிப்பிற்கு உட்பட்டது, அடிப்படை உரிமைகள், மனித சுதந்திரம் மற்றும் கண்ணியம் இடைநிறுத்தப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, “சர்வாதிகாரப் போக்குகளை எதிர்த்து, நமது அரசியலமைப்பைப் பாதுகாக்க உறுதியாக நின்றவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவது இளைஞர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு பெரியவர்களுக்கும் முக்கியம்” என்றார்.
இதையும் படிங்க : பிரதமர் மோடி உலக அரங்கில் இந்தியர்களின் சொத்து; காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com