Thol Thirumavalavan: ரயில்வே சொத்துக்களை விற்றால் மாநிலங்களுக்கு பங்கு தர வேண்டும் என மக்களவை எம்.பி தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.
Thol Thirumavalavan: ரயில்வே சொத்துக்களை விற்றால் மாநிலங்களுக்கு பங்கு தர வேண்டும் என மக்களவை எம்.பி தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.
Published on: March 18, 2025 at 10:07 pm
புதுடெல்லி, மார்ச் 18, 2025: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் மக்களவையில் திங்கள்கிழமை (மார்ச் 17, 2025) பேசும்போது சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்போது, ”ரயில்களில் பத்திரிகையாளர்கள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். தென்னிந்தியாவை இணைக்கும் வகையில் சரக்கு வாகனங்களுக்கான தனிப்பாதையை உருவாக்க வேண்டும். விமானங்கள் மற்றும் குறிப்பிட்ட ரெயில்களில் உள்ள ‘டைனமிக்’ கட்டண முறையை முற்றாக கைவிட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “ரயில்வே சொத்துக்களை விற்பதும், தனியாருக்கு தாரை வார்ப்பதும் நடந்து வருகிறது. இவ்வாறு செய்யும்போது மாநிலங்களின் கருத்தை கேட்பது இல்லை. ரெயில்வேக்கு மாநிலங்கள்தான் நிலம் வழங்குகின்றன.
எனவே விற்பதாக இருந்தால் மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும். மாநிலங்களுக்கு அதை மலிவு விலையில் வழங்கலாம். அல்லது விற்ற பணத்தில் பங்கு தர வேண்டும்.
மும்பை வாழ் தமிழர்களின் நலனுக்காக மும்பையில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் ரெயில்களை நெல்லை மற்றும் நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : இரும்பு பயன்பாட்டின் தமிழக வரலாறு: தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அமைச்சர் பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com