Pakistani spy arrested in Rajasthan : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜெய்சால்மரில் இது நான்காவது கைது ஆகும்.
Pakistani spy arrested in Rajasthan : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜெய்சால்மரில் இது நான்காவது கைது ஆகும்.
Published on: September 26, 2025 at 1:04 pm
ஜெய்சல்மர் (ராஜஸ்தான்), செப்.26, 2025: ராஜஸ்தான் சிஐடி உளவுத்துறை, இராணுவத்தை உளவு பார்த்ததாக ஹனீஃப் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பணம் பெற்றுக்கொண்டு, பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ-க்கு ரகசியத் தகவல்களை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து, சிஐடி (பாதுகாப்பு) காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஷ்ணுகாந்த் கூறுகையில், “மாநில உளவுத்துறை பிரிவு எல்லை மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.
இந்நிலையில், சதர் காவல் நிலையத்தின் பசன்பிர் ஜூனியில் வசிக்கும் மிர் கானின் (47) மகனான ஹனீப் கான் நடவடிக்கையில் சந்தேகங்கள் எழுந்தன.இவர், ஜெய்சால்மரின் மோகன்கரில் உள்ள பிடிஎம்மில் பஹாலில் வசித்து வந்தார். பின்னர் நடத்தப்பட்ட இரகசிய விசாரணையில் உளவு பார்த்தது தொடர்பான தகவல்கள் இரகசிய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டன” என்றார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் 2025 ஆம் ஆண்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் இது 4வது கைது நடவடிக்கை ஆகும்.
இதையும் படிங்க :பேபி ஐ லவ் யூ.. மாணவிகளுக்கு ஆபாச மேசேஜ் அனுப்பிய சாமியார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com