Special Trains | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
September 16, 2026
Special Trains | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Published on: October 20, 2024 at 11:07 am
Special Trains | தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் இருந்து பாட்னா வரை செல்லும் நீண்ட தூர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர்31 ஆம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. அதேபோல், வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ‘சாத்’ பண்டிகையும் நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது. இந்த பண்டிகை நாட்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்கு ஏதுவாக நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
டெல்லியில் இருந்து பீஹார் தலைநகர் பாட்னா வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இரு நகரங்களுக்கு இடையில் உள்ள 994 கி.மீ., தூரத்தை இந்த ரயில் 11.5 மணி நேரத்தில் கடந்து செல்லும். இதற்கு முன்னர், டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயில் தான், நீண்ட தூர ரயில் என்ற பெருமை பெற்றது.
தற்போது புதிதாக நீண்ட தூரம் இயக்கப்படும் டெல்லி – பாட்னா வந்தே பாரத் ரயில் அக்டோபர் 30 முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் ‘சேர் கார்’ இருக்கையில் பயணிக்க ரூ.2,575 கட்டணமும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கைக்கு ரூ.4,655ம் கட்டணம் வசூலிக்கப்படும். உணவு மற்றும் தேநீர் கட்டணமும் இதில் அடக்கம்.
இந்த ரயில் டெல்லியில் இருந்து காலை 8:25 மணிக்கு கிளம்பும். பாட்னாவிற்கு இரவு 8 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் காலை 7:30 மணிக்கு பாட்னாவில் கிளம்பும் ரயில், டெல்லிக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். இடையில் கான்பூர், பிரயாக்ராஜ், பக்ஸர், அராஹ் ஆகிய நகரங்களில் நிற்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க பெங்களூரு- மங்களூரு: தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு!





திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com