Maharashtra Election | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், மிலிந்த் தியோரா ஆதித்ய தாக்கரேவை எதிர்கொள்கிறார்.
Maharashtra Election | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், மிலிந்த் தியோரா ஆதித்ய தாக்கரேவை எதிர்கொள்கிறார்.
Published on: October 29, 2024 at 12:36 pm
Maharashtra Election | 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் 20 வேட்பாளர்களின் பெயர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வோர்லி, டிண்டோஷி மற்றும் கூடல் போன்ற முக்கிய தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், சிவசேனா – உத்தவ் தாக்கரே பிரிவின் முக்கிய தலைவருமான ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக, முன்னாள் காங்கிரஸ் கட்சியினரான மிலிந்த் தியோராவை ஷிண்டேவின் சேனா நிறுத்தியுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான தியோரா, இந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், சிவசேனாவில் இணைந்தார். பின்னர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக தியோராவை போட்டியிட வைக்க ஷிண்டே எடுத்துள்ள முடிவு, வொர்லி பகுதியில் உயர் அழுத்தப் போட்டியாக மாற்றும்.
இதுகுறித்து தியோரா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“மும்பையின் வோர்லியில் இருந்து என்னை மகாயுதி வேட்பாளராக நிறுத்தும் சிவசேனாவின் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் சிவசேனாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வோர்லி மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு, @mieknathshinde Jiக்கு அவர்களின் கருத்துகளைச் எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன். கட்சி மேலிடத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மக்களவை உறுப்பினர் நாராயண் ரானேவின் மகன் நிலேஷ் ரானே கூடல் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், அவரது தம்பியும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான நித்தேஷ் ரானே பாஜகவால் மறு பரிசீலனை செய்யப்பட்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கன்காவலியில் போட்டியிடுகிறார்.
சிவசேனா கட்சியானது, வாஷிம் மாவட்டத்தில் உள்ள ரிசோட் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் எம்.பி.பவானா கவாலியை வேட்பாளராக அறிவித்துள்ளது. மேலும், இன்னொரு சட்டமன்ற உறுப்பினர் அம்ச்யா பட்வி, துலே மாவட்டத்தில் உள்ள அக்கல்குவா தொகுதியில் சிவசேனா கட்சியின் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்.
மும்பையில் உள்ள டிண்டோஷி தொகுதியில் முன்னாள் லோக்சபா உறுப்பினர் சந்தய் நிருப்பம் போட்டியிடுகிறார். மேலும், மாநில தலைநகரான மும்பையில் உள்ள ஆண்டெரி ஈஸ்ட் தொகுதிக்கு, முன்னாள் பாஜக தலைவர் முர்ஜி படேலை சிவசேனா கட்சி வேட்பாளராக நியமித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு சிவசேனாவில் இணைந்து பால்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக முன்னாள் எம்பி ராஜேந்திர கவிட், பால்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com