Mythology | நரகாசுரனை அழிக்க மகாவிஷ்ணு செய்த தந்திரம் தெரியுமா?
Mythology | நரகாசுரனை அழிக்க மகாவிஷ்ணு செய்த தந்திரம் தெரியுமா?
Published on: October 29, 2024 at 1:13 pm
Mythology | நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்கள் கொடுத்து துன்புறுத்தி வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை அழிக்க நினைத்தார். அவன் பூமி தாய்க்கு பிறந்தவன் என்பதால் அவன் தாயை தவிர வேறு யாராலும் அவனை கொல்ல முடியாத வரத்தை பெற்றிருந்தான். இதை அறிந்திருந்த மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார்.
அது என்னவென்றால் நரகாசுரனிடம் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். அந்த அம்பு மகாவிஷ்ணு மீது பட்டதும் அவர் மயக்கமடைந்தது போல் கீழே விழுந்தார். இதைப் பார்த்த சத்தியபாமா கடுமையான கோபம் கொண்டு நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்தியபாமா பூமியின் அவதாரம் என்பதை அறியாமல் அவரோடு போர் செய்தான்.
போரில் அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான். அந்த தருணத்தில் தான் அவனுக்கு சத்தியபாமா தன் தாய் என்று தெரிந்தது. அப்போது அவன் தன் தாயிடம் அம்மா நான் மறைந்த இந்த நாள் மக்களின் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் நான் அழிந்த இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்திய பாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தனர். இதை ஒட்டி நரகாசுரன் மறைந்த நாள் தீபாவளி ஆக கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க : அணு அளவும் தவறாத இந்திரஜித் பிரம்மாஸ்திரம்; மூச்சுப் பேச்சின்றி விழுந்த லட்சுமணன்: ஹனுமன் என்ன செய்தார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com