Mythology | இந்திரஜித்தின் ஏவிய பிரம்மாஸ்திரத்தால் மண்ணில் சரிந்து விழுந்து லட்சுமணன் எப்படி உயிர்த்தெழுந்தார் தெரியுமா?
Mythology | இந்திரஜித்தின் ஏவிய பிரம்மாஸ்திரத்தால் மண்ணில் சரிந்து விழுந்து லட்சுமணன் எப்படி உயிர்த்தெழுந்தார் தெரியுமா?
Published on: October 28, 2024 at 1:17 pm
Mythology | இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை எடுத்து லட்சுமணனை குறி வைத்தான். அது சீறிப்பாய்ந்து செல்லும் வழியிலேயே பலரை காயப்படுத்தி இறுதியில் லட்சுமணன் மீது பாய்ந்தது. பிரமாஸ்திரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் மண்ணில் சரிந்து விழுந்தால் லட்சுமணன். இதனை பார்த்ததும் ராமன் ஓடி வந்து அனுமனிடம் அனைவரையும் பிழைக்க வைக்க ஒரு வழி உள்ளது என்று கூறினார்.
இமயமலை பகுதியில் சஞ்சீவி என்ற ஒரு மலை உள்ளது. அங்கு பல அதிசயம் மூலிகைகள் உள்ளன. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் மூலிகை, சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழைய படியே பெறுவதற்கான மூலிகை என்று தனித்தனியே உள்ளது. அவைகளை நீ எடுத்து விரைந்து வா என்று கூறினார். சொல்லியபடியே உடனே விரைந்து புறப்பட்டார் அனுமன்.
வேகமாக பறந்து சென்ற அனுமன் சஞ்சீவி மலையை அடைந்தார். அங்கு எது ராமர் சொன்ன மூலிகை என்று தெரியாமல் குழம்பினார். சிறுதும் யோசிக்காமல் மலையை பெயர்த்து எடுத்து கையோடு தூக்கிச் சென்றார். இமயமலையிலிருந்து இலங்கைக்கு சட்என பறந்து சென்றார். அந்த மலையில் இருந்து வெளியான காற்றை சுவாசித்ததுமே பலரும் உயிர்த்தெழுந்தனர்.
போரில் ஈடுபட்டவர்களின் காயங்கள் மறைந்து போயின. உறுப்புகள் இழந்தவர்களுக்கு மீண்டும் உடலில் உறுப்புகள் உருவாகின. மயங்கி விழுந்த லட்சுமணன் உயிர்த்தெழுந்தார். தக்க சமயத்தில் மூலிகையை கொண்டு வந்து தம்பியை காப்பாற்றிய தனது அன்புக்குரிய அனுமனையும் கட்டி தழுவிக்கொண்டார்.
இதையும் படிங்க : தங்கத்தை பிச்சு கொடுத்த தர்மன்; வாரி வழங்கிய கர்ணன்: கிருஷ்ணர் வைத்த தேர்வில் வெற்றி யாருக்கு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com