How to make jangiri | பேக்கரி சுவையில் ஜாங்கிரி வீட்டிலேயே எப்படி செய்யலாம் தெரியுமா?
How to make jangiri | பேக்கரி சுவையில் ஜாங்கிரி வீட்டிலேயே எப்படி செய்யலாம் தெரியுமா?
Published on: October 29, 2024 at 11:48 am
How to make jangiri | குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய ஜாங்கிரி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
உளுந்து – 1 கப்
அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
ஃபுட் கலர் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை -2 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் உளுந்தை எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று முறை நன்கு கழுவி பின்னர் உளுந்து மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்து ஊரிய பின்னர் தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது மிக்ஸி ஜாரில் பாதி அளவு உளுந்தும் 1/4 டம்ளர் தண்ணீரும் சேர்த்து அரைக்க வேண்டும்.
மிக்ஸி ஜார் சூடாகாதபடிக்கு குளிர்ந்த நீர் பயன்படுத்திக் கொள்ளவும். அரைத்த மாவினை ஓர் அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். இதனுடன் அரிசி மாவு மற்றும் ஃபுட் கலர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். ஜிலேபி செய்வது இந்த பகுதி மிகவும் முக்கியமான ஒன்று. 15 நிமிடம் மாவினை தொடர்ந்து நன்கு அடித்து கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் உளுந்து அளந்த அதே கப்பில் இரண்டு கப் சர்க்கரையும் ஒரு கப் தண்ணீரும் சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும். பாகினை இரண்டு விரல்களால் தொட்டு பார்க்கும் பொழுது ஒரு கம்பி பதம் வர வேண்டும். இது பாகு தயாரிக்க சரியான பதமாகும். இந்த தருணத்தில் பாகுடன் அரை டீஸ்பூன் ஃபுட் கலர் சேர்க்க வேண்டும். இதனுடன் அரை டீஸ்பூன் அளவு ரோஸ் எசன்ஸ் சேர்க்கலாம். அல்லது ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் அரைத்து வைத்த மாவினை ஒரு கவரில் சேர்த்து அதன் முனையில் சிறிய துளையிட்டு மெஹந்தி இருக்கும் அமைப்பு போன்று தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில் ஜாங்கிரி செய்வது போன்று வரைந்து பிராக்டிஸ் செய்த பின்னர் நேரடியாக நன்கு சூடான எண்ணெயில் ஜாங்கிரி மாவினை பிழிந்து விட வேண்டும். ஜாங்கிரி மாடல் கடினமாக இருந்தால் முறுக்கு பிழிவது போல் மினி ஜாங்கிரி செய்து கொள்ளலாம்.
மாவு வெந்து பொரிந்து வந்ததும் இதனை எடுத்து தயார் செய்து வைத்த சீனி பாகுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜாங்கிரி நன்கு பொன்னிறமாக வெந்து வந்த பின்னரே எடுக்க வேண்டும். இல்லையெனில் பாகுடன் சேர்க்கும் போது கரைந்து விட வாய்ப்புள்ளது. இப்போது பாகுடன் சேர்ந்து ஊறி ஜூஸியாக மிகவும் சுவையான ஜாங்கிரி தயார்.
இதையும் படிங்க : டீ, காபிக்கு செம்ம ஸ்நாக்ஸ்; வீட்டிலேயே தட்டை செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com