Assam Train Accident: அசாமில் இருந்து டெல்லி நோக்கி வந்த, ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 7 காட்டு யானைகள் உயிரிழந்தன; இதில் காயமுற்ற ஒரு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Assam Train Accident: அசாமில் இருந்து டெல்லி நோக்கி வந்த, ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 7 காட்டு யானைகள் உயிரிழந்தன; இதில் காயமுற்ற ஒரு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Published on: December 20, 2025 at 2:19 pm
புதுடெல்லி டிசம்பர் 20, 2025: அசாம் மாநிலம் நாகாவன் மாவட்டத்தில் உள்ள கம்பூர் பகுதியில், அசாமில் இருந்து டெல்லி நோக்கி வந்த, ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைகளின் கூட்டத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 காட்டு யானைகள் உயிரிழந்தன. காயமுற்ற ஒரு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் ரயிலின் எஞ்சின் மற்றும் ஐந்து பெட்டிகள் பாதிக்கப்பட்டன. அதிகாலை 2.17 மணியளவில் ஜமுனாமுக்–கம்பூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக வடகிழக்கு முனைய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
யானைகளின் கூட்டத்தை ரயில் ஓட்டுநர் கண்டதும் அவசர பிரேக் பயன்படுத்தினார். ஆனாலும், யானைகள் ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு, குவாகாத்தியில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, பயணிகள் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.
ரயில் பாதையில் யானைகள் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் இன்னும் போதுமானதாக இல்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க 2 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்; குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com