Kamal Gavai: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாயின் தாயார் கூறினார்.
Kamal Gavai: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாயின் தாயார் கூறினார்.
Published on: October 2, 2025 at 6:09 pm
புதுடெல்லி, அக்.2, 2025: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் உள்ளார். இவரின் தாயார் கமல் கவாய். இவர், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். அதாவது, மகாராஷ்டிராவின் அமராவதியில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இந்திய தலைமை நீதிபதி பூஷன் ஆர் கவாயின் தாயார் கமல் கவாய் புதன்கிழமை (அக்.1, 2025) தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து இந்தப் பதில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக, 84 வயதான கமல் மராத்தியில் எழுதியுள்ள கடிதத்தில் ஆர்எஸ்எஸ் அரங்கில் இருந்து டாக்டர் பிஆர் அம்பேத்கரின் சித்தாந்தத்தை முன்வைத்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.. ‘கடும் பதிலடி கொடுக்கப்படும்’..!
மேலும், அந்தக் கடிதத்தில் நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியானவுடன், பலர் என்னை மட்டுமல்ல, மறைந்த தாதாசாகேப் கவாய் (அவரது கணவர், முன்னாள் பீகார் ஆளுநர் ஆர்.எஸ். கவாய்) மீதும் விமர்சிக்கவும் குற்றச்சாட்டுகளை சுமத்தவும் தொடங்கினர்.
நாங்கள் (டாக்டர் பி.ஆர்) அம்பேத்கரின் சித்தாந்தத்தின்படி எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தோம், அதே நேரத்தில் கவாய் அம்பேத்கரிய இயக்கத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். வெவ்வேறு சித்தாந்தங்களின் மேடையில் எங்கள் சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொள்வதும் முக்கியம், அதற்கு தைரியம் தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை.. தமிழ்நாட்டின் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com