complaint against Sameer Modi: சமீர் மோடி மீதான புகாரின் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
complaint against Sameer Modi: சமீர் மோடி மீதான புகாரின் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Published on: September 19, 2025 at 11:11 am
Updated on: September 19, 2025 at 11:12 am
புதுடெல்லி, செப்.19, 2025: பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் பிரபல தொழிலதிபர் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி வியாழக்கிழமை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பேசிய காவல்துறை மூத்த அதிகாரிகள், கடந்த வாரம் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்தப் பாலியல் புகார் குறித்த பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. லலித் மோடி சகோதரர் சமீர் மோடி மீது பாலியல் புகார் அளித்தவர் வேறு யாரும் இல்லை; அவரது முன்னாள் பெண் தோழி என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், புகார்தாரர் சமீர் மோடிக்கு எதிராக அளித்த புகாரின் மீது செப்டம்பர் 10 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
ரூ.50 கோடி பேரம்
சமீர் மோடி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி, அந்தப் பெண் காவல்துறையை அணுகி தீர்வு கோரியுள்ளார். மேலும், சமீர் மோடியிடம் நிவாரணமாக ₹50 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னர், சமீர் மோடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :போதைப் பொருள் கடத்திய ஆசிரியை.. தட்டித் தூக்கிய போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com