Ratan Tata Health Condition | மூத்த தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அக்.7ஆம் தேதி ரத்தன் டாட்டா தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நிராகரித்தார். வயது தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “எனது வயது தொடர்பான உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 86 வயதான அவர் தனது உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு உறுதியளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க
Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்….
Rahul Gandhi: வாக்கு திருட்டு, அரசு திருட்டை தொடர்ந்து தற்போது கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்….
Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Telangana: தெலுங்கானாவில் 24 கேரட் தங்க விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது….
BJP Leads Rajasthan: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது; இக்கட்சி ஜெய்ப்பூரை கைப்பற்றி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்