திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கம்.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மம்தா பானர்ஜி

Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

Published on: September 19, 2026 at 11:00 am

புதுடெல்லி, செப்.19, 2026: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் பாரம்பரிய தேர்தல் சின்னத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை எதிர்த்து, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளுக்கும் இடையே கட்சியின் கட்டுப்பாடு தொடர்பாக ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் செப்டம்பர் 17ஆம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சிப் பெயரையும், கட்சியின் பாரம்பரியமான சின்னத்தையும் இரு அணிகளும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடைக்காலமாக தனித்தனி பெயர்களும் சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மம்தா பானர்ஜி தலைமையிலான அணிக்கு “மம்தா அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ்” என்ற பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. அரூப் ராய் தலைமையிலான அணிக்கு “ஜனநாயக திரிணாமுல் காங்கிரஸ்” என்ற பெயரும், உறை (Envelope) சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், மேகாலயா மற்றும் திரிபுராவில் இரு அணிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகக் கருதப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இடைக்கால ஏற்பாடு ஏன்?

இந்த புதிய பெயர் மற்றும் சின்னங்கள் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜினகர் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டு, இரு அணிகளும் ஒரே பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய குழப்பத்தைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் இந்த இடைக்கால ஏற்பாட்டை செய்துள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இறுதி உரிமை குறித்து தேர்தல் ஆணையம் பின்னர் முடிவு செய்ய உள்ளது.

மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சியின் பெயரும் பாரம்பரிய சின்னமும் முடக்கப்பட்டதை, ஒரு தாய் தனது குழந்தையை இழப்பதற்கு ஒப்பானதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயக வரலாற்றில் “கருப்பு நாள்” என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து மம்தா உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பதால், திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விவகாரம் அடுத்தகட்ட சட்டப் போராட்டமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வாக்குத் திருட்டு, அரசு திருட்டு, இப்போது கட்சியின் சின்னம் திருட்டு.. ராகுல் காந்தி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com