Rajnath Singh: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Rajnath Singh: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on: October 2, 2025 at 5:19 pm
Updated on: October 2, 2025 at 5:49 pm
புதுடெல்லி, அக்.2, 2025: சர் க்ரீக் பகுதிக்கு அருகே பாகிஸ்தானின் சமீபத்திய இராணுவக் குவிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (அக்.2, 2025) கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். அப்போது, எந்தவொரு தற்செயலான தாக்குதலும் வரலாறு மற்றும் புவியியல் இரண்டையும் மாற்றக்கூடிய மிகவும் வலுவான பதிலடியை ஏற்படுத்தும் என்று அறிவித்தார்.
हमारे सैनिकों के पास शस्त्र भी हैं, और मनोबल भी। हमारे सामने कोई चुनौती टिक नहीं सकती।
— Rajnath Singh (@rajnathsingh) October 2, 2025
चाहे आतंकवाद हो या किसी भी तरह की समस्या, हम सबसे निपटने की और जीतने की क्षमता रखते हैं। pic.twitter.com/vT50Px05UA
‘சாஸ்திர பூஜை’ நிகழ்வில் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், சர் க்ரீக் பகுதியில் நீண்டகாலமாக நிலவும் எல்லைப் பிரச்சினையை பாகிஸ்தான் வேண்டுமென்றே தூண்டுகிறது என குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக பேசிய ராஜ்நாத் சிங், “சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், சர் க்ரீக் பகுதியில் எல்லைப் பிரச்சினையை பாகிஸ்தான் கிளறி வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
हमारे लिए शस्त्र केवल उपकरण नहीं हैं और न ही केवल शक्ति प्रदर्शन का साधन। शस्त्र धर्म की स्थापना करने के साधन हैं।
— Rajnath Singh (@rajnathsingh) October 2, 2025
भारत सिर्फ शस्त्र की पूजा ही नहीं करता, बल्कि समय आने पर शस्त्रों का इस्तेमाल करना भी जानता है। pic.twitter.com/yj4xqIOz3t
ஆனால் பாகிஸ்தானின் நோக்கங்களில் ஒரு குறைபாடு உள்ளது; அதன் நோக்கங்கள் தெளிவாக இல்லை. சர் க்ரீக்கை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் சமீபத்தில் தனது இராணுவ உள்கட்டமைப்பை விரிவுபடுத்திய விதம் அதன் நோக்கங்களை வெளிப்படுத்துகிறது” என்றார். இந்த நிலையில், குஜராத்தின் பூஜில் ராணுவ வீரர்கள் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் என்றார்.
இதையும் படிங்க : இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை.. தமிழ்நாட்டின் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com