Rahul Gandhi: சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Rahul Gandhi: சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Published on: March 5, 2025 at 5:53 pm
புதுடெல்லி, மார்ச் 5, 2025: ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (மார்ச் 5, 2025) கவலை தெரிவித்தார்.
மேலும், “கடந்த மாதம் (2025 பிப்ரவரி) புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது மக்களுக்கு உதவ அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர், ஆனால் அவர்களின் குரல் கேட்கப்படவில்லை” என்றார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, புதுடெல்லி ரயில் நிலையத்தில் போர்ட்டர்களுடன் சமீபத்தில் நடத்திய உரையாடலின் வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்போது, கூட்ட மேலாண்மையை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ‘ஆவாஸ் பாரத் கி’ போர்டல் குறித்த பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இந்தியாவின் குரலை நாங்கள் கேட்போம் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள வீடியோவில், சில நாட்களுக்கு முன்பு, நான் புதுடெல்லி ரயில் நிலையத்தை அடைந்து அங்குள்ள சுமை தூக்கும் சகோதரர்களை மீண்டும் சந்தித்தேன்.
"किसी-किसी दिन खाने के भी पैसे नहीं होते। हम घर पर पैसे भेजें या खाना खाएं।" हमारे कुली भाई ऐसी मुश्किलों में जीने को मजबूर हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) March 5, 2025
नई दिल्ली रेलवे स्टेशन पर भगदड़ के दौरान इन लोगों ने अपनी जान जोख़िम में डालकर लोगों की मदद की, लेकिन इनकी आवाज़ नहीं सुनी जा रही।
मैं इनकी मांगों को… pic.twitter.com/s8YGzoVYE7
இந்த உரையாடலின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்ட நாளில் மக்களின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் எவ்வாறு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள் என்பதை அவர்கள் என்னிடம் கூறினர்.
ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றார். மேலும், டெல்லி ரயில் நிலைய நெரிசலின் போது மக்களை காப்பாற்றுவதிலும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும், உயிரிழந்தவர்களின் உடலை அகற்றுவதிலும் இவர்கள் முன்னின்று செயல்பட்டனர் என்றார்.
இதையும் படிங்க:
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com