Rahul Gandhi in US: அமெரிக்காவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rahul Gandhi in US: அமெரிக்காவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 21, 2025 at 10:53 am
நியூயார்க், ஏப்.21 2025: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது என்றும், இந்த அமைப்பில் ஏதோ தவறு உள்ளது என்றும் அமெரிக்காவில் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஸ்டனில் இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றிய காந்தி, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை உதாரணமாகக் காட்டி, இரண்டு மணி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறினார்,
மேலும், இது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார். இது குறித்த ராகுல் காந்தி மேலும், “மகாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் வாக்களித்தனர்.
Spent a productive morning with @RahulGandhi engaging with some of India’s sharpest business minds. We discussed the evolving landscape of entrepreneurship, technology, inclusivity, and the need for ethical leadership. It’s clear that the private sector has a major role to play… pic.twitter.com/yNrsyPTnjf
— Sam Pitroda (@sampitroda) April 20, 2025
இது ஒரு உண்மை. தேர்தல் ஆணையம் மாலை 5:30 மணியளவில் ஒரு புள்ளிவிவரத்தை எங்களுக்கு வழங்கியது. மேலும் இரவு 7:30 மணியளவில் இரண்டு மணி நேரத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இது சாத்தியமற்றது” என்றார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உரிய உண்மை இல்லை எனக் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அக்ஷர்தாம் டூர், பிரதமர் மோடியுடன் டின்னர்: ஜே.டி. வான்ஸ் இந்தியா விசிட்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com