Narendra Modi: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Narendra Modi: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Published on: April 26, 2025 at 9:35 pm
புதுடெல்லி, ஏப்.26 2025: வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருவதை உறுதி செய்வதற்காக தனது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஏப்.26 2025) தெரிவித்தார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி ஆணை 51,000க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை விநியோகித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்தார்.
15வது ரோஜ்கர் மேளாவில் உரையாற்றிய அவர், இளைஞர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் நேரம் இது என்றார். இந்த காணொலி நிகழ்வில், சர்வதேச நாணய நிதியம் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இருக்கும் என்று கூறியுள்ளதாகவும், ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உயரும் என்றும் அவர் கூறினார்.
Addressing the Rozgar Mela. Best wishes to the newly inducted appointees. https://t.co/FkLhKcJoLN
— Narendra Modi (@narendramodi) April 26, 2025
மேலும், ஆட்டோமொபைல் மற்றும் காலணி தொழில்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி புதிய சாதனைகளை எட்டியுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றார். இதைத் தொடர்ந்து, 2014-க்கு முன்பு 18 மில்லியன் டன்னிலிருந்து 145 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளன. அதே நேரத்தில் தேசிய நீர்வழிகள் ஐந்தில் இருந்து 110 ஆகவும், அவற்றின் நீளம் 2,700 கி.மீட்டரிலிருந்து 5,000 கி.மீட்டருக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளன என்று பிரதமர் பட்டியலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குஜராத்தில் 1,000 வங்கதேசத்தினர் கைது; போலீஸ் அதிரடி வேட்டை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com