Narendra Modi Thaipusam Wishes: பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனத் தெரிவித்துள்ளார்.
Narendra Modi Thaipusam Wishes: பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனத் தெரிவித்துள்ளார்.
Published on: February 11, 2025 at 3:52 pm
பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச வாழ்த்து: தமிழ்நாட்டில் இன்று தைப்பூச திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம் முதல் திருச்செந்தூர் வரை பக்தர்கள் வெள்ளத்தில் முருகப்பெருமானின் கோவில்கள் காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ” அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆசீர்வதிக்கப்பட்ட தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ” முருகப்பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம் மற்றும் ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த நன்னாளில் தான் வெற்றிக்காக பிரார்த்திப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
— Narendra Modi (@narendramodi) February 11, 2025
முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.…
அதில், ” இந்த புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல் ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.
இதை எடுத்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ” இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும் செயல் ஊக்கத்தையும் கொண்டு வரட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ஜார்கண்ட் செல்லும் குடியரசுத் தலைவர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com