Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு 4 நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு 4 நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

Published on: December 12, 2025 at 4:49 pm
புதுடெல்லி, டிச.12, 2025: பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் 15ஆம் தேதி முதல் நான்கு நாள் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு செல்ல உள்ளார். அவரது பயணத்தின் முதல் கட்டமாக, டிச.15ஆம் தேதி ஜோர்டான் மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைனை சந்திக்கிறார். முன்னதாக, ஜோர்டான் மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைன் தங்கள் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால உறவு
அதன்படி, இந்தியா–ஜோர்டான் உறவுகள் முழுமையாக பரிசீலிக்கப்படுவதோடு, பிராந்திய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள மன்னர் அப்துல்லா II அவர்களை சந்திக்கிறார். இந்தியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த பயணம் இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும், பிராந்திய அமைதி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. டெல்லி காற்று மாசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
எத்தியோப்பியா முதல் பயணம்
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 16ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது அவரின் அந்த நாட்டிற்கான முதல் பயணமாகும். எத்தியோப்பியா பிரதமர் டாக்டர் அபி அஹ்மத் அலி அவர்களின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் நடைபெறுகிறது. அங்கு தங்கியிருக்கும் காலத்தில், இந்தியா–எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்த அனைத்து அம்சங்களிலும் டாக்டர் அலி அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறும்.
மேலும், ‘குளோபல் சவுத்’ நாடுகளின் பங்காளிகளாக, இந்த பயணம் இரு நாடுகளின் நட்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. பயணத்தின் இறுதி கட்டமாக, டிசம்பர் 17ஆம் தேதி முதல், மோடி அவர்கள் ஓமான் நாட்டிற்கு செல்கிறார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் நடைபெறுகிறது.
இரண்டாவது முறையாக ஓமன் பயணம்
மேலும், இது பிரதமர் நரேந்திர மோடியின் ஓமன் நாட்டிற்கான இரண்டாவது பயணமாகும். இந்தியா–ஓமான் நாடுகள் நூற்றாண்டுகளாக நிலைத்து வரும் நட்பு, வர்த்தக தொடர்புகள் மற்றும் மக்களிடைய உறவுகளை அடிப்படையாகக் கொண்ட விரிவான மூலோபாய கூட்டாண்மையைப் பகிர்ந்து வருகின்றன. இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கிறது.
இதையும் படிங்க : கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரிப்பு.. சிவராஜ் சிங் சௌகான்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com