Pahalgam terror attack: ஜம்மு கார்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
Pahalgam terror attack: ஜம்மு கார்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
Published on: April 23, 2025 at 7:57 am
Updated on: April 23, 2025 at 8:15 am
ஸ்ரீநகர், ஏப். 23. 2025: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமான இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பணிகள். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இயற்கை அழகின் காரணமாக மின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் இந்த உயரமான இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே செல்ல முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், காயமடைந்தவர்களை கீழே இறக்க உதவுவதற்காக உள்ளூர்வாசிகள் குதிரைகளைப் பயன்படுத்தினர். 12 சுற்றுலாப் பயணிகள் பஹல்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்புகொண்டு, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டார். அமித் ஷா அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தி நிலைமையை மதிப்பாய்வு செய்தார்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நான் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த கொடூரமான குற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது! அவர்கள் தீய நோக்கங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் நமது உறுதி அசைக்க முடியாதது. மேலும் அது இன்னும் வலிமையாகும். என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சவுதி அரேபியாவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை டெல்லி திரும்பினார்.
பிரதமர் மோடி நேற்று (செவ்வாய்கிழமை ) காலை சவுதி அரேபியாவில் சென்று இறங்கினார். பிரதமர் மோடி பயணித்த விமானத்தின் முன்னும் பின்னும் வட்டமிட்டபடி சவுதி அரேபிய விமானங்கள் பாதுகாப்பு மரியாதை செலுத்தின. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். அவருக்கு குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பயணத்தை பாதியில் ரத்து செய்து டெல்லி திரும்பியுள்ளார்.
Deeply disturbing news out of Kashmir. The United States stands strong with India against Terrorism. We pray for the souls of those lost, and for the recovery of the injured. Prime Minister Modi, and the incredible people of India, have our full support and deepest sympathies.…
— Donald J. Trump Posts From His Truth Social (@TrumpDailyPosts) April 22, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பஹல்கா்ம் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பக்கத்தில் தனது கண்டத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 12 சுற்றுலாப் பயணிகள் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com