மகாசாகர் தொலைநோக்குப் பார்வை.. சேஷல்ஸ் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!

Narendra Modi seychelles Visit : இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சேஷல்ஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அங்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

Published on: June 27, 2026 at 4:08 pm

புதுடெல்லி ஜூன் 27, 2026; இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சேஷல்ஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அங்கு புறப்பட்டுள்ளார். இந்த ஆண்டு, சேஷல்ஸ் தேசிய தினம் பொன்விழா கொண்டாட்டமாக நடைபெறுவதால், இந்த நிகழ்வு இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சேஷல்ஸ், இந்தியாவின் முக்கியமான கடல்சார் அண்டை நாடாகவும், இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குப் பார்வை (SAGAR – Security and Growth for All in the Region) திட்டத்தில் முக்கிய பங்காளியாகவும் விளங்குகிறது. உலகத் தெற்கின் நலன்களை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளில் சேஷல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அதனை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி, சேஷல்ஸ் குடியரசின் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி உடன் கலந்துரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். இரு நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வர்த்தக உறவுகள், சுற்றுலா வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி சேஷல்ஸ் தேசியப் பேரவையில் உரையாற்றுவதை பெருமையாகக் கருதுகிறார். அங்குள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்க உள்ளார். இந்தியா–சேஷல்ஸ் உறவுகள், இந்தப் பயணத்தின் மூலம் மேலும் வலுப்பெறும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இதையும் படிங்க பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்.. பரபரப்பு நிமிடங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com