Narendra Modi | நகர்ப்புற நக்சல்களை நாம் அடையாளம் காண வேண்டும் என தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Narendra Modi | நகர்ப்புற நக்சல்களை நாம் அடையாளம் காண வேண்டும் என தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Published on: November 1, 2024 at 8:36 am
Updated on: November 1, 2024 at 8:45 am
Narendra Modi | “இந்தியாவிற்குள்ளும் வெளியேயும்” சில சக்திகள் தங்கள் அரசியல் தேவைக்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார். மேலும், “நகர்ப்புற நக்சல்களின் கூட்டணியை” அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும் என்று மக்களை அவர் வலியுறுத்தினார்.
குஜராத்தின் கெவாடியாவில் நடந்த ‘ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்’ நிகழ்ச்சியில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். அப்போது, “இந்திய சமூகத்தில் குழப்பம் மற்றும் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்றார்.
மேலும், பிரதமர் ஒற்றுமைக்கான உரத்த அழைப்பையும் விடுத்தார். தொடர்ந்து, அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் உள்ள மதிப்பையும் அடிக்கோடிட்டு காட்டினார். மேலும் பேசிய மோடி, “இம்முறை தேசிய ஒற்றுமை தினம் ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வைக் கொண்டு வந்துள்ளது. இன்று ஒருபுறம் ஒற்றுமைப் பண்டிகையாகக் கொண்டாடும் நாம் மறுபுறம் தீபாவளிப் பண்டிகையாகவும் கொண்டாடுகிறோம்.
தீபாவளி முழு நாட்டையும் விளக்குகள் மூலம் இணைக்கிறது, முழு நாட்டையும் ஒளிரச் செய்கிறது, இப்போது தீபாவளி பண்டிகை இந்தியாவையும் உலகத்துடன் இணைக்கிறது. பல நாடுகளில் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டிலும் உலகிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், இந்தியாவின் நலம் விரும்பிகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க : பரபரக்கும் மகாராஷ்டிரா; மகனை களமிறக்கிய ராஜ் தாக்கரே: பா.ஜ.க, ஷிண்டே நிலைப்பாடு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com