Maharashtra new government : மகாராஷ்டிராவில் புதிய அரசு டிச.2ஆம் தேதி பதவியேற்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Maharashtra new government : மகாராஷ்டிராவில் புதிய அரசு டிச.2ஆம் தேதி பதவியேற்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Published on: November 26, 2024 at 2:22 pm
Maharashtra new government | மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கம் டிச.2ஆம் தேதி பதவியேற்கும் எனத் தெரியவருகிறது. மேலும், முதல்வர் உட்பட மகாராஷ்டிராவின் புதிய அரசாங்கத்திற்கான பதவியேற்பு விழா இன்னும் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பிரமாண்டமான விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி பிரமாண்டமாக விழாவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
டிசம்பர் 2 ஆம் தேதி இந்த நிகழ்வை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், முதல்வர் பதவி தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
தற்போது இடைக்கால முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே இருப்பார் என்றும் அடுத்து முதலமைச்சர் முடிவு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நாக்பூர் தொகுதியில் அபார வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com