மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு டிச.5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு டிச.5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Published on: November 30, 2024 at 8:39 pm
Updated on: November 30, 2024 at 8:48 pm
Maharashtra Next CM | பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மகாராஷ்டிரா தலைவர் சந்திரசேகர் பவான்குலே, மகாயுதி அரசாங்கத்தின் பதவியேற்பு விழா டிசம்பர் 5 ஆம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என்று ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இன்று (நவ.30, 2024) அறிவித்துள்ளார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மகாராஷ்டிராவில் அடுத்த அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடுகளில் கூட்டணி இறுதி உடன்பாடு தற்போது வரை எட்டப்படவில்லை.
இந்நிலையில், பதவியேற்பு தேதி அறிவிப்பு வந்துள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை மாநிலத்தின் முக்கிய பதவிக்கு மாற்ற வாய்ப்புள்ளது என்பது கிட்டத்தட்ட தெளிவாகத் தெரிகிறது.
முன்னதாக, அடுத்த முதல்வர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வதாக பதவி விலகும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில், அஜித் பவார் மற்றும் ஃபட்னாவிஸ் ஆகியோர் வியாழக்கிழமை இரவு டெல்லியில் ஷாவை சந்தித்து மாநிலத்தில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து விவாதித்தனர். இதில் ஏக்நாத் ஷிண்டேயும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அசாமில் நிலநடுக்கம் ; பொதுமக்கள் அச்சம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com