Coldrif syrup: மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரே மாதத்தில் 9 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Coldrif syrup: மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரே மாதத்தில் 9 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Published on: October 4, 2025 at 4:03 pm
போபால், அக்.4, 2025: மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் சிறுநீரக தொற்று காரணமாக ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு சனிக்கிழமை (அக்.4, 2025) கோல்ட்ரிஃப் சிரப் விற்பனையைத் தடை செய்தது.
இது குறித்து முதலமைச்சர் மோகன் யாதவ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “கோல்ட்ரிஃப் சிரப் காரணமாக சிந்த்வாராவில் குழந்தைகள் இறந்தது மிகவும் துயரமானது. இந்த சிரப் விற்பனை மத்தியப் பிரதேசம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிற தயாரிப்புகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : புதுச்சேரியில் பிரதமர் மோடி மணல் சிற்பம்.. ஆர்வத்துடன் பார்த்த முதல்வர்!
இந்த சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு விசாரணை நடத்துமாறு தமிழக அரசைக் கோரியது.
இதற்கிடையில், “இன்று காலை விசாரணை அறிக்கை பெறப்பட்டது, மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று யாதவ் கூறினார்.
இது தொடர்பாக அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பர் 7 முதல் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஒன்பது குழந்தைகள் இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. தற்போது, சிந்த்வாரா மற்றும் நாக்பூரைச் சேர்ந்த எட்டு குழந்தைகள் உட்பட 13 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாடகர் ஜூபின் கார்க் மரணத்துக்கு என்ன காரணம்? விசாரணை ஆணையம் அமைத்த அரசு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com